ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து போரிடுவோம்: தலிபான் புதிய தலைவர் அழைப்பு

ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து போரிடுவோம்: தலிபான் புதிய தலைவர் அழைப்பு
Updated on
1 min read

தலிபான் அமைப்பில் பிரிவினைகள் கூடாது, ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக அனைத்து பிரிவினரும் ஒன்றிணைந்து போரிட வேண்டும் என்று அந்த அமைப்பின் புதிய தலைவர் முல்லா அக்தர் முகமது மன்சூர் அழைப்பு விடுத்துள்ளார்.

தலிபான் தலைவர் முல்லா ஒமர் 2013-ம் ஆண்டிலேயே உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு அண்மையில் தெரிவித்தது. இந்தத் தகவலை தலிபான்களும் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் தலிபான் அமைப் பின் புதிய தலைவராக அக்தர் முகமது மன்சூர் தேர்வு செய்யப் பட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது:

நாம் பிரிந்திருந்தால் எதிரி களுக்கு கொண்டாட்டமாகிவிடும். எனவே நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும். அதற்காக புனித போரில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த போரின்போது நமக்குள் பிரிவினைகள் கூடாது. அரசுக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கும் எதிராக ஒன்றிணைந்து போரிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

கடந்த 2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்கா மீது அல்காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக அந்த தீவிரவாத அமைப்பு முகாமிட்டிருந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

அப்போது முல்லா ஒமர் தலைமையில் தலிபான்கள் ஆட்சி நடத்தி வந்தனர். அமெரிக்க ராணுவ தாக்குதலால் முல்லா ஒமர் தலைமறைவானார். அவர் எங்கிருக் கிறார் என்பது மர்மமாகவே இருந்தது.

இந்நிலையில் 2013-ம் ஆண்டில் தலிபான் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளி யாகி உள்ளது.இதனிடையே ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு கால் ஊன்றி வருகிறது. தலிபான் தலைவர்களில் பலர் ஐ.எஸ்.எஸுக்கு தாவி வருகின் றனர். இதனால் அந்த அமைப்பில் பிளவுகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில் அனைத்து பிரிவினரும் ஒன்றிணைய வேண் டும் என்று தலிபான்களின் புதிய தலைவர் முல்லா அக்தர் முகமது மன்சூர் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய தலைமைக்கு எதிர்ப்பு

தலிபான்களில் ஹக்கானி என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அக்தர் முகமது மன்சூருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் முல்லா ஒமரின் மகன் முல்லா யாகூப் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் சிலரும் புதிய தலைமையை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் தலிபான் அமைப்பில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

அமைதி முயற்சிக்கு பாதிப்பு

பாகிஸ்தான் சமரசத்தால் ஆப்கா னிஸ்தான் அரசுக்கும் தலிபான் களுக்கும் இடையே தற்போது அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. புதிய தலைவர் முல்லாஅக்தர் முகமது மன்சூர் தனது ஆடியோ உரையில் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. புனிதப் போரில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்திருப்பதால் அமைதி பேச்சு கேள்விக்குறியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in