

இத்தாலி குடிமைப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திகளின் படி முழு அடைப்பில் இருக்கும் இத்தாலியில் கரோனா பலி எண்ணிக்கை திங்கட் கிழமை நிலவரப்படி 5,476 ஆக அதிகரித்துள்ளது, மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,138 ஆக அதிகரித்துள்ளது.
குடிமை பாதுகாப்புத் துறை தலைவர் அஞ்சேலோ போரெல்லி தொலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, 46,638 பேருக்கு கரோனா தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, 5476 பேர் மரணமடைந்துள்ளனர், என்றார். முதன் முதலாக பிப்ரவரி 21ம் தேதி வடக்கு இத்தாலியில் முதல் கரோனா தோன்றி இன்று பெரிய அளவில் இத்தாலியை நாசம் செய்து வருகிறது.
நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 23,783 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுளளனர், 19,846 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 3009 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றார் போரெல்லி.
அதே போல் 7,024 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தப் போரெல்லிதான் அந்நாட்டு கரோனா எமர்ஜென்சியின் தேசிய ஆணையரும் கூட.