கட்டுப்பாடுகளை பின்பற்றுங்கள்: உலக சுகாதார அமைப்பு இளைஞர்களுக்கு அறிவுரை

கட்டுப்பாடுகளை பின்பற்றுங்கள்: உலக சுகாதார அமைப்பு இளைஞர்களுக்கு அறிவுரை
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொடர்பான அறிவுரைகளை இளைய தலைமுறையினர் ஏற்க மறுத்தால் மருத்துவமனைக்கு செல்ல நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா வைரஸை கட்டுப்படுத்த ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்
பிரிக்க நாடுகளில் அந்தந்த நாடுகளின் அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளன.

"மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம், கேளிக்கை, கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும், தேவையற்ற
பயணங்களை மேற்கொள்ளக்கூடாது என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் இளைஞர்கள் வழக்கம்போல கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தங்கள் காதலி அல்லது மனைவியை சுமந்து கொண்டு ஓடும் போட்டியில் ஏராளமானோர் நேற்று பங்கேற்றனர்.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் நேற்று முன்தினம் கூறும்போது, "இளைய
தலைமுறையினருக்கு சில அறிவுரைகளைக் கூற விரும்புகிறேன். கரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல நேரிடும். உயிரிழக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எச்சரிக்கையாக இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in