Published : 20 Mar 2020 08:02 AM
Last Updated : 20 Mar 2020 08:02 AM

மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி கரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி கரோனா வைரஸ் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ், ஜெனீ வாவில் நிருபர்களிடம் கூறிய தாவது:

கரோனா வைரஸ் காய்ச்சலால் உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட் டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட் டுள்ளனர். ஆசிய நாடுகளைவிட ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

எங்கள் நாடு, சமுதாயம் கரோனா வைரஸால் பாதிக்கப்படாது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்த வைரஸை எதிர்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். கரோனா வைரஸ் காய்ச்சல் அறி குறி உள்ள அனைவரையும் மருத் துவப் பரிசோதனை நடத்த வேண்டும்.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப் படும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் அனைவரையும் மருத் துவப் பரிசோதனைக்கு உட்படுத்து வது கடினமாக உள்ளது என்று கூறுவதை ஏற்றுக் கொள்கிறோம். எனினும் சந்தேகத்துக்கு உரிய நபர்களின் ரத்த மாதிரியை பரி சோதனை செய்வது கட்டாயமாகும். இதன்மூலமே கரோனா வைரஸ் நோயாளிகளை கண்டறிந்து அவர் களை தனிமைப்படுத்த முடியும். அவர்களோடு தொடர்பில் இருந் தவர்களையும் தனிமைப்படுத்த முடியும். இதன்மூலம் மட்டுமே வைரஸ் பரவுவதை தடுக்க முடி யும். விளையாட்டு போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், பொதுக்கூட் டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

இந்த காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதைய நிலையில் 5 வித மான சிகிச்சைகளை உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. சுமார் 10 நாடுகளில் இந்த சிகிச்சை முறைகள் சோதனை அடிப் படையில் பரிசோதித்து பார்க்கப்படு கின்றன. இதில் எது சிறந்த மருத்துவ சிகிச்சை என்பதைக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்போம்.

மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி கரோனா வைரஸ். இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x