Last Updated : 19 Mar, 2020 11:03 AM

 

Published : 19 Mar 2020 11:03 AM
Last Updated : 19 Mar 2020 11:03 AM

நல்ல செய்தி- 3 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக: சீனாவில் புதிய கரோனா தொற்று இல்லாத நாள்

சீனாவின் வூஹானில் கடந்த டிசம்பர் 2019-ல் பரவத்தொடங்கி இன்று உலகையே பெரும் அச்சுறுத்தல்களுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் இட்டுச் சென்று கரோனா வைரஸ் தோன்றிய, தொற்றிய நாள் முதல் சீனாவில் வியாழனன்று உள்நாட்டில் புதிதாக ஒருவருக்கும் கரோனா தொற்று பரவவில்லை.

புதனன்று 34 பேருக்குக் கரோனா தொற்றியிருப்பது தெரிய வந்தது, ஆனால் இவர்கள் அயல்நாடுகளிலிருந்து வந்தவர்கள், வூஹானில் ஒரு புதிய கரோனா கேஸ் கூட வியாழனன்று ரிப்போர்ட் ஆகவில்லை.

8 பேர் மேலும் மரணமடைந்துள்ள நிலையில் சீனாவில் பலி எண்ணிக்கை 3,245 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த 34 கரோனா நோயாளிகளில் 21 பேர் பீஜிங்க்கைச் சேர்ந்தவர்கள்.

கரோனா மையமாகத் திகழ்ந்த ஹூபேய் மாகாணத்தில் புதிதாகப் பரவிய கரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை.

சீனாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,928 ஆக உள்ளது. இதில் பலியான 3245 பேரும் அடங்கும். கரோனா தொற்று நீங்கி, குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 70,420 ஆக உள்ளது.

ஹாங்காங்கில் 4 மரணங்கள் உட்பட மொத்தம் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 192 ஆக அதிகரித்துள்ளது. மக்காவில் உறுதி செய்யப்பட்ட கேஸ்கள் 15 ஆகவும் தய்வானில் 1 பலி உட்பட 100 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

உலகம் முழுதும் கரோனா பலி எண்ணிக்கை 8,809 ஆக அதிகரித்துள்ளது. 157 நாடுகளில் 2,18,631 பேர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x