Published : 17 Mar 2020 06:56 PM
Last Updated : 17 Mar 2020 06:56 PM

கரோனா வைரஸ்: தாய்லாந்து பள்ளிகள், பொழுதுபோக்கு அரங்குகள் மூடல்

தாய்லாந்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் மூடப்படும் என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தாய்லாந்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “தாய்லாந்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது. எனவே தாய்லாந்தில் கோவிட் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் பொழுதுபோக்கு அரங்குகள் மூடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஒசா கூறும்போது, “இன்னும் தாய்லாந்து முழுமையாக முடக்கப்படவில்லை. நாங்கள் தாய்லாந்தில் கோவிட் காய்ச்சல் பரவுவதைக் குறைத்து வருகிறோம்” என்றார்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட் காய்ச்சலுக்கு 1,83,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7,178 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x