கரோனா வைரஸ் அச்சம்: ஈரானில் 85,000 கைதிகள் விடுவிப்பு

கரோனா வைரஸ் அச்சம்: ஈரானில் 85,000 கைதிகள் விடுவிப்பு
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஈரானில் தற்காலிகமாக சுமார் 85,000 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நீதித்துறையின் செய்தித் தொடர்பாளர், “ஈரான் சிறைகளில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக சிறைகளில் சுமார் 85,000 கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்படவுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் மதத் தலைவரான அயத்துல்லா ஹஷேம் குல்பேகனிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அவர் மரணம் அடைந்துள்ளார்.

ஈரானில் 16,169 பேர் இதுவரை கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 988 பேர் பலியாகியுள்ளனர்.

ஈரானில் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 55% பேர் 60 வயதைக் கடந்தவர்கள். 15% பேர் 40 வயதைக் கடந்தவர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் காய்ச்சல் 19 பாதிப்பு ஈரானில் தீவிரமாக உள்ளது என்றும் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு போதிய இடம் இல்லாமல் போகும் என்றும் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஈரானில் சுமார் 1,10,000 மருத்துவமனைகள் உள்ளன. இதில் தலைநகர் டெஹ்ரானில் மட்டும் 30,000 மருத்துவமனைகள் உள்ளன.

ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.

கோவிட் -19 காய்ச்சல் உலகம் முழுவதும் 112 நாடுகளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in