கரோனா வைரஸ் உச்சத்தில் இத்தாலி, ஸ்பெயின் : 5 ஐரோப்பிய நாடுகளில் மரண விகிதம் சீனாவை விட அதிகரிப்பு- தரவு ஆய்வில் தகவல்

கரோனா வைரஸ் உச்சத்தில் இத்தாலி, ஸ்பெயின் : 5 ஐரோப்பிய நாடுகளில் மரண விகிதம் சீனாவை விட அதிகரிப்பு- தரவு ஆய்வில் தகவல்
Updated on
1 min read

சீனாவில் ஆரம்பித்த ஆட்கொல்லி வைரஸ் கரோனா என்கிற கோவிட்-19 வைரஸ் தற்போது உலகம் முழுதும் பரவி இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கரோனா மரணம் சீனாவையும் கடந்து விட்டது. 5 ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதத்தை விட மரண விகிதம் அதிகரித்துள்ளதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

சீனாவில் மரண எண்ணிக்கை 4 ஹாங்காங் இறப்புகளையும் சேர்த்து 3,217 என்றால் சீனாவுக்கு வெளியே உலகம் முழுதும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3296 ஆக அதிகரித்துள்ளது.

அதே போல் கரோனா தொற்று பீடித்திருப்பவர்கள் எண்ணிக்கை சீனாவுக்கு வெளியே 88,367 என்றால் சீனாவில் 81,020 என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் 10-வது கரோனா மரணத்துக்குப் பிறகே பாதிக்கப்படுவோர் விகிதமும் மரண விகிதமும் அதிகரித்தவண்ணம் உள்ளன. முதல் 10 மரணங்களுக்குப் பிறகு சீனாவிலும் ஸ்பெயினிலும் 5 நாட்களில் 50 பேர் கரோனாவுக்கு மரணமடைந்தனர் என்றால் இத்தாலியில் ஒரு வாரத்தில் 50பேர் மரணமடைந்துள்ளனர் என்று தரவு ஆய்வுகள் (data analysis) தெரிவிக்கின்றன.

அதாவது மரணங்கள் விகிதத்தைப் பார்த்தால் ஸ்பெயினில் 2 நாட்களில் 200 பேர் மரணமடைந்திருப்பது சீனாவை விட 2 நாட்கள் முன் கூட்டியே மரண விகிதம் 200 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் இத்தாலி1,500 மரணங்களை கரோனாவுக்கு சந்தித்துள்ளது, இதுவும் சீனாவைக் காட்டிலும் 4 நாட்கள் முன்னிலையில் உள்ளது.

இத்தாலியில் 10 லட்சத்தில் 826 பேருக்கு கரோனா இருக்கிறது என்று தரவுகள் தெரிவிக்கும் அதே வேளையில் இதில் மரணமடைபவர்கள் எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவுக்கு வெளியே இத்தாலியில் பலி எண்ணிக்கை 1,809 என்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,747 என்பது கவனிக்கத்தக்கது.

ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 724 என்றால் ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 292 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 3,774 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 69 பேர் பலியாகியுள்ளனர். கரோனாவின் புதிய மையம் ஐரோப்பாதான் என்று உலகச் சுகாதார மையம் அறிவித்துள்ளது.

வியாழன் முதல் ஹாங்காங்கில் நுழையும் அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in