

யுகே மக்கள் தொகையில் சுமார் 80% பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அரசு ஆவணம் கூறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து லண்டன் ஊடகங்கள், ''12 மாதங்களில் கோவிட் காய்ச்சலால் யுகேவில் 80% மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ரகசியமாகக் கசிந்த அரசு ஆவணத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது” என்று
செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்து பொது சுகாதார ஆவணத்தில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
யுகேவில் கடந்த 24 மணிநேரத்தில் 232 பேருக்கு கோவிட் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 35 பேர் கோவிட் காய்ச்சலால் பலியாகியுள்ளனர். சுமார் 1,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக கரோனா வைரஸால் அதிகமாக இத்தாலி பாதிப்புக்குள்ளாகி உள்ளது.