Published : 16 Mar 2020 12:32 PM
Last Updated : 16 Mar 2020 12:32 PM

அதிவேகமாக பரவும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல்; இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,800 ஆக அதிகரிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 368 பேர் இறந்ததால் பொதுமக்கள் பதற்றம்

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால் இத்தாலியில் 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு ஒரே நாளில் 368 பேர் உயிரிழந்துள்ளது அந்த நாட்டில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான், பிரி்ட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இதன் பாதிப்பு ஏராளமாக உள்ளது. இத்தாலியில் மட்டும் இதுவரை 24,747 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை அந்த நாட்டில் 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த நாட்டில் கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 368 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து இத்தாலி அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 காய்ச்சலுக்கு 368 பேர் உயிரிழந்துள் ளனர். தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற நாடான வாடிகனும் கடுமையான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தரும் வாடிகனில் உள்ள புகழ்பெற்ற தேவாலயம் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், இத்தாலியில் வைரஸைக் கட்டுப்படுத்த பொதுக் கூட்டங்களுக்குத் தடை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தவிர்த்து பிற பொருட்களுக்கு இத்தாலி அரசு வர்த்தகத் தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு 1,69,904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 6,520 பேர் பலியாகியுள்ளனர்.

ஹாலிவுட் நடிகை

கோவிட்-19 வைரஸால், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘குவாண்டம் ஆஃப் சோலஸ்’, டாம் க்ரூஸ் நடித்த ‘ஒபிலிவியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஓல்கா குரிலென்கோ என்ற ஹாலிவுட் நடிகை பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தானும் தன்னுடைய மனைவியும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப் பட்டிருப்பதால் தனிமைப்படுத் தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ஓல்கா குரிலென்கோவும் கோவிட் 19 வைரஸ் காய்ச்சலால் பாதிக் கப்பட்டுள்ளார். இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சீனா

சீனாவில் மட்டும் வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 3,213 பேர் உயிரிழந்துள்ளனர். 80,860 பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

பிரிட்டன்

பிரிட்டனில் கோவிட்19 பாதிப்பு அதிகமாக இருப்பதால், லட்சக் கணக்கான ஊழியர்கள் வீடுகளில் இருந்தே தங்களது வேலைகளை பார்த்து வருகின்றனர். நேற்று முதல் அவர்கள் இதைப் பின்பற்றி வருகின்றனர். இதனால் பொது மக்கள் பயன்படுத்தும் ரயில்கள், மெட்ரோ, பஸ் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.

இதனிடையே பிரிட்டனில் கோவிட்-19 பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் தனி வார்டுகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அப்படி அவர்கள் தனி வார்டுக்குச் செல்ல மறுக்கும்போது அவர்களுக்கு சுமார் ரூ.92 ஆயிரம் வரை அபராதம் விதிக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.

பிரான்ஸில் விடுமுறை

கோவிட்-19 வைரஸ் அச்சுறுத் தல் காரணமாக ஜெர்மனி நாட்டை ஒட்டிய தனது எல்லைகளை பிரான்ஸ் அரசு மூடியுள்ளது. மேலும் பிரான்ஸில் உள்ள பள்ளிகள், மது விடுதிகள், ஓட்டல்களை மூட பிரான்ஸ் அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் ஆஸ்திரியாவிலும் 5-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா

அமெரிக்காவின் பெரும் பாலான மாகாணங்களில் கூட்டம் நடத்துவதற்கும், பொது இடங் களில் கூடுவதற்கும் தடை விதிக் கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் நகரங்களில் ஓட்டல்கள், இரவு விடுதிகள், சினிமா தியேட் டர்களை மூட உத்தரவிடப்பட்டுள் ளது.

வாஷிங்டன், ஒஹியோ, இல்லினாய்ஸ், மாசாசுசெட்ஸ் ஆகிய மாகாணங்களிலும் ஓட்டல்கள், மது விடுதிகள், இரவு நேர விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

தென் கொரியா

தென் கொரியாவில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 65 பேர் இறந்துள்ளனர். 8 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளது. அவர்கள் தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகள்

கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக பல ஆப்பிரிக்க நாடுகள் தங்களது எல்லையை மூடி சீல் வைத்துள்ளன.

கென்யா, கானா, நமீபியா, எத்தியோப்பியா, மொராக்கோ, துனீசியா, எகிப்து, அல்ஜீரியா, செனகல், டோகா, கேமரூன், புர்கினா பசோ, காங்கோ, தென் ஆப்பிரிக்கா, ஐவரி கோஸ்ட், கபோன், சூடான், கினியா, செஷல்ஸ் உள்ளிடட நாடுகளிலும் கோவிட்-19 பாதிப்பு உள்ளது.

2-வது எம்.பி.

கடந்த வாரம் பிரிட்டனைச் சேர்ந்த எம்.பி.யும், அமைச்சருமான நாடின் வனீசா, கோவிட்-19 வைரஸால் பாதிகக்கப்பட்டார். தற்போது மற்றொரு எம்.பி. கேட் ஆஸ்பார்ன், கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் தற்போது தனிமைப்படுத்தப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் 28 பேர் பாதிப்பு

இலங்கையில் கோவிட்-19 வைரஸால் 28 பேர் பாதிக் கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.இவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப் பட்டுள்ளனர். மேலும் வைரஸ் காய்ச்சலால் மேலும் தங்களுக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதை மறைப்பவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித் துள்ளது.

எனவே பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x