ஈரானில் மிதமான நிலநடுக்கம்

ஈரானில் மிதமான நிலநடுக்கம்
Updated on
1 min read

ஈரானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியது.

இந்த நிலநடுக்கம் குறித்து குறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “ஈரானில் மிதமான தென் பகுதி மாகாணமான ஹர்மோசானில் ஞாயிறு இரவு 10.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் பந்தர் காமர் பகுதியிலிருந்து 39 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 16 கிலோ மீட்டராக பதிவாகி உள்ளது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

2017 ஆம் ஆண்டு இராக் - ஈரான் எல்லையில் ரிக்டர் அளவில் 7.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2003 ஆம் ஆண்டு ஈரானில் கெர்மன் மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 23,000 பேர் பலியாகினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in