

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா தடை விதித்துள்ளது.
கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது ஆப்பிரிக்க நாடுகள் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 121 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மற்ற கண்டங்களில் ஒப்பிடும்போது குறைவு.
இந்த நிலையில் உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்குப் பயணத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து உகாண்டா சுகாதாரத் துறை அமைச்சர் கூறும்போது, “ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 11 நாடுகள் உட்பட 16 நாடுகளுக்கு உகாண்டா வர தடை விதிக்கப்படுகிறது. மேலும், உகாண்டாவிற்கு வரும் அவர்களின் பயணத் திட்டத்தைத் தள்ளிவைக்குமாறு வலியுறுத்திக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கோவிட் - 19 பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
சீனாவில் கோவிட் -19 காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,136 பேர் பலியாகியுள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.