Published : 13 Mar 2020 04:30 PM
Last Updated : 13 Mar 2020 04:30 PM

அசிங்கம் பிடித்த மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள், இவர்கள் இருந்தால் கரோனா வரத்தான் செய்யும்: தாய்லாந்து அமைச்சரின் ட்வீட்டால் சர்ச்சை 

தாய்லாந்து கடற்கரையில் மேற்கத்திய சுற்றுலாப்பயணி.| பிரதிநிதித்துவப் படம்.

உலகம் முழுதும் கரோனா அச்சுறுத்தல் பரவியுள்ள நிலையில் சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவில் ஏற்பட்டு வருகிறது. தாய்லாந்து மேற்கத்தியர்களுக்கு, ஆசியர்களுக்கு மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகும்.

இந்நிலையில் அங்கு விடுப்புக்கு காலம் கழிக்க வந்துள்ள மேற்கத்திய நாட்டவர்கள் அழுக்கான ஆடைகளை அணிந்திருப்பதாகவும் குளிப்பதில்லை என்றும் கூறிய தாய்லாந்து சுகாதார அமைச்சரின் சர்ச்சை ட்வீட் அங்கு சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து சுகாதார அமைச்சர் அனுதின் கர்ண்வீரகுல் மேற்கத்திய பயணிகள் முகக்கவசம் அணிவதில்லை, கரோனா இருக்கும் போது அலட்சியமாக இருக்கின்றனர், சுத்தபத்தமாக இருப்பதில்லை, அழுக்கடைந்த ஆடை, குளிப்பதில்லை என்று சாடியதோடு தாய்லாந்து நாட்டவர்கள் ஆசியர்களை விட மேற்கத்திய பயணிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ட்வீட்டில் எச்சரிக்கை செய்திருந்தார்.

ஆனால் இந்த ட்விட்டர் கணக்கு அமைச்சர் அனுதின் ’அட்மின்’ குழுவால் நடத்தப்படுகிறது என்று பும்ஜய் தாய் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சமாதானம் கூறினார்.

ஆனால் இந்த ட்வீட் பெரிய சர்ச்சைகளைக் கிளப்ப வெள்ளி மதியம் இது தொடர்பான அத்தனை ட்வீட்களும் நீக்கப்பட்டன.

இப்பொது என்றில்லை அனுதின் எப்பவுமே மேற்கத்தியச் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்கிப் பேசி வருவது வழக்கம். முகக் கவசம் அணியவில்லை எனில் மேற்கத்தியர்கள் நாட்டை விட்டு விரட்டப்படுவார்கள் என்று கடந்த மாதம் பேசியதும் நினைவுகூரத் தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x