கரோனா வைரஸ் பீதி: கைகுலுக்காமால் இந்திய பாரம்பரிய வழியில் வணக்கம் தெரிவித்த ட்ரம்ப்

கரோனா வைரஸ் பீதி: கைகுலுக்காமால் இந்திய பாரம்பரிய வழியில் வணக்கம் தெரிவித்த ட்ரம்ப்
Updated on
1 min read

கரோனா வைரஸ் பயத்தின் காரணமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அயர்லாந்து அதிபர் லியோ வரத்கர் சந்திப்பின்போது கை கொடுத்து கொள்ளாமல் இந்திய பாரம்பரிய வழியில் வணக்கம் தெரிவித்து கொண்டனர்.

அமெரிக்க அதிபர் ட்ர்ம்ப், அயர்லாந்து அதிபர் லியோ வரத்கர் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஒவல் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது இருவரும் கை குலுக்கி கொள்ளாமல் இந்திய வழியில் வணக்கம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் ட்ரம்ப் பேசும்போது, “ நாங்கள் இன்று கைகுலுக்கவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தோம் என்ன செய்ய போகிறோம் என்று, அது ஒரு வித்தியாசமான உணர்வு. நான் சமீபத்தில்தான் இந்தியாவிலிருந்து வந்தேன். நான் அங்கு யாருக்கும் கை கொடுக்கவில்லை. அது மிகவும் எளிதானது. ஏனென்றால் அவர்கள் இவ்வாறுதான் பழக்கி இருக்கிறார்கள்” என்றார்.

அயர்லாந்து அதிபர் லியோ வரத்கரரின் தந்தை ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சில நாட்களுக்கு முன்பு சந்தித்த பிரேசில் அதிகாரிக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்றியுள்ளது. இதனால் அமெ ரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அமெரிக்காவில் இதுவரை 1,135 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 38 பேர் கரோனா பாதிப்பால் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுத்து வருகிறார். அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வர ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in