

ஐரோப்பா மீதான அமெரிக்காவின் பயணத் தடையை அந்த அமைப்புக்கான கவுன்சில் தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை 1,135 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 38 பேர் கரோனா பாதிப்பால் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுத்து வருகிறார். அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வர ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, “கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நம் நாட்டில் நுழைவதைத் தடுக்க ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்த நிலையில் இதனை ஐரோப்பாவுக்கான கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், ''பொருளாதாரச் சீர்குலைவுகள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கோவிட் - 19 பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
சீனாவில் கோவிட் -19 காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,136 பேர் பலியாகியுள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.