இத்தாலியில் கரோனா வைரஸுக்கு பலி எண்ணிக்கை 463 ஆக அதிகரிப்பு; கனடாவில் முதல் மரணம்

இத்தாலியில் கரோனா வைரஸுக்கு பலி எண்ணிக்கை 463 ஆக அதிகரிப்பு; கனடாவில் முதல் மரணம்
Updated on
1 min read

இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ள நிலையில் கனடாவில் கரோனா வைரஸ் காரணமாக முதல் மரணம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இத்தாலி ஊடங்கள் தரப்பில் கூறும்போது, “இத்தாலியில் கோவிட் - 19 காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70க்கும் அதிகமானவர்கள் கோவிட் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை 724 பேர் கோவிட் காய்ச்சலிருந்து விடுப்பட்டுள்ளனர். 9000க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவிட் - 19 (கரோனாவ வைரஸ்) காய்ச்சலுக்கு கனடாவில் முதல் மரணம் ஏற்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனடாவின் சுகாதார மையம் கூறும்போது, “ கனடாவில் லின் வேலே மருத்துவ மையத்தில் கோவிட் -19 காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

கனடாவில் புதிதாக இதுவரை 14 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in