இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட முடிவு

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட முடிவு
Updated on
1 min read

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அந் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யுஎன்பி) போட்டியிட முடிவு செய்துள்ளது.

இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா இருந்து வருகிறார். கட்சிக்கு தலைவராக ரணில் விக்கிரமசிங்கே இருந்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் சஜித் பிரேமதாசா, ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளார். மேலும் இந்த கூட்டணியில் சிறு பான்மை முஸ்லிம் மற்றும் தமிழ் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதற்கு ரணில் விக்கிரமசிங்கே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும் கட்சியில் ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரேமதாசா என 2 பிரிவு உருவாகியுள்ளதால் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் தெரிவித்துவிட்டதாக ரணில் விக்கிரமசிங்கே நேற்று தெரிவித்தார்.

இதனிடையே இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் பொதுச் செயலர் அகிலா விராஜ் கரியவாசம் அனுப்பியுள்ளார்.

இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கட்சியில் பெரிய அளவிலான குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.– பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in