Last Updated : 07 Mar, 2020 03:46 PM

 

Published : 07 Mar 2020 03:46 PM
Last Updated : 07 Mar 2020 03:46 PM

ஜப்பானைத் தொடர்ந்து மேலும் ஒரு கப்பலில் கரோனா வைரஸ் பீதி; பரிசோதனையில் 21 பேருக்கு பாதிப்பு

ஜப்பானுக்கு வந்த கப்பலைப்போல அமெரிக்காவுக்குத் திரும்பியுள்ள 3500 பேர் தங்கியுள்ள பிரமாண்ட கப்பலிலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இக்கப்பலில் முதற்கட்டமாக 46 பேருக்கு நடைபெற்ற பரிசோதனையில் 21 பேருக்கு பாதிப்பு இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவித்தார்.

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்

கடந்த மாதம் ஜப்பானுக்கு வந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பல், யோகோகாமா கடற்கரையில் வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டது. கப்பலில் இருந்த 3,700 பேருக்கும் சோதனை நடத்தப்பட்டதில் சுமார் 700 பேர் தொற்றுநோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது.

கரோனா வைரஸில் இருந்து அமெரிக்காவில். இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது, அதில் ஒருவர் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்தவர். அதே நேரத்தில் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் 200க்கும் அதிகமான மக்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் பென்சில்வேனியா, இந்தியானா, மினசோட்டா மற்றும் நெப்ராஸ்கா ஆகியவை தங்களது கரோனா வைரஸின் முதல் வழக்குகளைப் பதிவு செய்தன.

தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் மேம்படுவதற்கும் உதவும் வகையில் டிரம்ப் 8.3 பில்லியன் டாலர் நடவடிக்கையில் கையெழுத்திட்டார்,

கிராண்ட் பிரின்சஸ் கப்பலில் ஏற்பட்டுள்ள கரோனோ வைரஸ் நோய்த் தொற்று குறித்து அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள்ளதாவது:

தனது முந்தையப் பயணத்தை முடித்துக்கொண்டு கலிஃபோர்னியாவுக்கு திரும்பியுள்ள கிராண்ட் பிரின்சஸ் கப்பலில் கரோனோ வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஹவாயில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்குச் சென்று கொண்டிருந்த கிராண்ட் பிரின்சஸ் கப்பல், புதன்கிழமை கரையிலிருந்து தொலைதூரத்தில் தள்ளிநிறுத்தி வைத்திருக்க உத்தரவிடப்பட்டது.

பிப்ரவரி மாதம் இக் கப்பலின் முந்தைய பயணத்தில் பயணித்த ஒருவர் இந்த நோயால் இறந்துவிட்டார் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்த பின்னர் இந்த பரிசோதனையை மேற்கொள்ளபபட்டது.

கடந்த சில நாட்களில், அதே பயணத்தில் இருந்த குறைந்தது 10 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பயணத்தில் சில பயணிகள் தற்போதைய பயணத்திற்காக கப்பலில் தங்கியிருந்தனர் - குழு உறுப்பினர்களிடமும் வைரஸ் தொற்று இருப்பதும் வெளிவந்தது.

வியாழக்கிழமை, ஒரு ராணுவ ஹெலிகாப்டர் குழுவினர் 951 அடி (290 மீட்டர்) கப்பலில் கயிறு மூலம் சோதனை கருவிகளைக் கீழிறக்கினர், அதனைத் தொடர்ந்து கப்பலில் கரோனா வைரஸ் அறிகுறிகளைக் கொண்ட 46 பேரை சோதிக்க முடிந்தது. பின்னர் அவற்றை ஒரு மாநில ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்வதற்காக ஹெலிகாப்டர் குழு பறந்து சென்றது. இதில் முதற்கட்டமாக 46 பேருக்கு நடைபெற்ற பரிசோதனையில் 21 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களிலிருந்து உறுதிசெய்யப்பட்ட பின்னர் கப்பலின் மருத்துவர் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு அவர்களின் முடிவுகளை தெரிவிக்கத் தொடங்கினார்.

இக்கப்பலில் 3500க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர். இக்கப்பல் இந்த வார இறுதிக்குள் வணிக ரீதியற்ற துறைமுகம் ஒன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் என்றும் கப்பலில் உள்ள அனைவரும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கப்பல் எங்கு நிறுத்தப்படும் என்று விரைவில் அறிவிக்கப்படும்.

தற்போது கப்பலில் உள்ள அனைவருமே அவரவர் அறைகளில் தங்கியுள்ளனர். பரிசோதனைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் அதைப் பெறுவார்கள்.

இதே கப்பலில் முந்தைய பயணிகளிடையே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது எங்களுக்குத் தெரியும். அதனால்தான் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது. மேலும் கப்பலில் உள்ள அனைவரையும் நாங்கள் சோதித்துப் பார்ப்போம், தேவையான அளவு அவர்களை தனிமைக்கு உட்படுத்துவோம். அவர்கள் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அவர்கள் இறங்கத் தேவையில்லை. அவர்கள் அனைவரையும் வேறொரு இடத்திற்கு அழைத்து வந்து வைரஸ் சோதனை கண்டறிய கலிபோர்னியா அதிகாரிகளுடன் கூட்டாட்சி அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்க மண்ணில் இறங்க அனுமதிக்கக்கூடாது: ட்ரம்ப் திட்டவட்டம்

அட்லாண்டாவில் உள்ள யு.எஸ். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ''பயணிகள் அமெரிக்க மண்ணில் இறங்க அனுமதிக்கக்கூடாது என்று விரும்புகிறேன். ஆனால் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப அதை தாமதப்படுத்துவேன்.

எங்கள் தவறு என்று எதுவுமில்லாதபோது ஒரு கப்பலின் தவறு காரணமாக எண்களை இரட்டிப்பாக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல அது கப்பலில் உள்ளவர்களின் தவறும் அல்ல. சரியா? அது அவர்களின் தவறு அல்ல. அவர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x