

துபாயில் 16 வயது இந்தியச் சிறுமிக்கு கரோனா தொற்று பரவியிருப்பது சோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது, இதன் மூலம் யுஏஇ-யில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியப் பள்ளியிலிருந்து இந்தச் சிறுமிக்கு கரோனா தொற்றியிருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பெண்ணின் தந்தை அயல்நாட்டிலிருந்து கரோனா தொற்றுடன் வந்தார், இதனையடுத்து மகளுக்கும் பரவியுள்லதாக துபாய் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
துபாயில் உள்ள இந்தியப் பள்ளி வியாழக்கிழமை முதல் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயல்நாட்டிலிருந்து கரோனாவுடன் வந்த தந்தை, மகள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இருவரும் இதிலிருந்து மெல்ல மீண்டு வருவதாக துபாய் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்,
இதனையடுத்து துபாயில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.