

இந்தோனேசியாவில் மவுண்ட் மெரபி எரிமலை வெடிக்க தொடங்கியதன் காரணமாக மோசமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்குவிமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்தோனேசிய ஊடகங்கள், “ஜாவா மற்றும் யோக்யகர்த்தா மாகாணத்திற்கு இடையே அமைந்துள்ள மவுண்ட் மெரபி எரிமலை சீற்றத்துடன் வெடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வானில் புகை மூட்டங்கள் சூழ்ந்து உள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட அங்கு விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மெரபி பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டருக்குவெளியேறுமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனனர்.
இந்தோனேசியாவில் செயல்பாட்டின் இருக்கக் கூடிய சக்தி வாய்ந்த எரிமலைகளில் மவுண்ட் மெரபி எரிமலையும் ஒன்று.
2010 ஆம் ஆண்டு மெரபி எரிமலை வெடித்ததில் சுமார் 350 பேர் பலியாகி உள்ளனர்.