

சிரியாவில் ரஷ்யா போர் குற்றங்களைச் செய்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை கூறும்போது, “ கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் கடந்த ஆண்டு முதல் சிரியாவும், ரஷ்யாவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்” என்றார்.
சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இதில் குட்டியிருப்பு பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
முன்னதாக இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலியாகினர்.
இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது.
உலக நாடுகளின் போர்க்களமாக இருக்கும் சிரியாவில் இதுவரை 3 லட்சத்து 46,600 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 70 சதவீத மக்கள் வறுமையிலும் உணவுத் தட்டுப்பாட்டாலும் தவிக்கின்றனர். அதேபோல், சுமார் 10 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து விட்டனர் என்று ஐ.நா. தெரிவிக்கின்றது.