

கரோனா வைரஸால் தீவிர பாதிப்பை அடைந்துள்ள நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. கோவிட் - 19 ( கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு ஜெர்மனியில் இதுவரை சுமார்157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு தீவிரத்தை கட்டுப்படுத்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் பெர்லினில் நடந்த குடியேற்றம் குறித்த கூட்டத்தில் முக்கிய அமைசர்களுடன் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சல் மெர்க்கல் கலந்து கொண்டார்.
அப்போது அமைச்சர் ஹார்ஸ்ட் சீஹோஃபரை வாழ்த்தும் பொருட்டு மெர்க்கல் கைக் குலுக்க தனது கைகளை நீட்டினார்.
ஆனால் ஹார்ஸ்ட் சீஹோபர் சிரித்து கொண்டு கையை கொடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து மெர்க்கலுக்கு கை கொடுக்காமல் சிரித்து கொண்டு சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானது.
கோவிட் 19 ( கரோனா வைரஸ்) காய்ச்சல், கை குலுக்குவதால் பரவும் என்பதால் அதனை தவிர்க்குமாறு மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.