

மலேசியாவின் புதிய பிரதமராக முகைதீன் யாசின் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து மலேசியாவின் அரண்மனை தரப்பில், “முன்னாள் உள்துறை அமைச்சர் முகைதீன் யாசின் மலேசியாவின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்க உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சித் தலைவர்களின் பிரதிநிதிகள், தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு மலேசிய மன்னர் இதனை அறிவித்துள்ளார்.
பிரதமர் மகாதீர் முகமது தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகிய நிலையில் பிரதமர் பொறுப்பை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சியில் சில பிரிவினர் வலியுறுத்திய நிலையில், ஆளும் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில்
இக்கூட்டத்தின் முடிவில், மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா செய்யும் நாள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து மலேசியாவின் பிரதமர் யார் என்று இழுப்பறி நீடித்தது. அன்வர் இப்ராகிமோ அல்லது மீண்டும் மகாதீர் முகமதுவோ பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகிய நிலையில் முகைதீன் யாசின் மலேசிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.