Published : 29 Feb 2020 02:59 PM
Last Updated : 29 Feb 2020 02:59 PM

கரோனா வைரஸ் எதிரொலி: ஈரான் பயணிகளுக்கு எல் சால்வேடார் தடை

கரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஈரானிலிருந்து பயணிகள் வருவதற்கு எல் சால்வேடார் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து எல் சால்வேடார் அதிபர் நயிப் கூறும்போது, “ போக்குவரத்து பயணிகள் உட்பட ஈரானில் இருந்து குடிமக்கள் எல் சால்வேடாருக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது.’’ எனக் கூறினார்.

முன்னதாக இத்தாலி மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பரவல் காரணமாக எல் சால்வேடார் தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது ஈரானுக்கு விதித்துள்ளது.

ஈரானில் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 210 இருக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இதனை ஈரான் அரசு பொய்யான தகவல் என்று முழுவதுமாக மறுத்துள்ளது. முன்னதாக ஈரானில் கோவிட் 19 காய்ச்சல் காரணமாக 34 பேர் பலியானதாக ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

உலக அளவில் கரோனா வைரஸுக்கு இதுவரை சுமார் 81,200க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x