

பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பிளாக்ஹோல் அதாவது கருந்துளையிலிருந்து மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியிலிருந்து சுமார் 390 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் பால்வெளிமண்டலக் கொத்தில் உள்ள பிரபஞ்சத்தின் மிகப்பெரிய கருந்துளையிலிருந்து மிகப்பெரிய அளவில் பெருவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக வியாழனன்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த பெருவெடிப்பின் தாக்கம் எப்படிப்பட்டது என்றால் கடும் உஷ்ண வாயுவில் இது மிகப்பெரிய பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது, அதாவது 15 பால்வெளி மண்டலங்களைத் தாங்கும் மிகப்பெரிய பள்ளத்தை இந்த பெருவெடிப்பு ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த பெருவெடிப்பு முந்தைய கருந்துளை பெருவெடிப்பைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம்.
பூமியிலிருந்து 390 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஓபியூகஸ் பால்வெளி மண்டலக் கொத்திலிருந்து இந்த பெருவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பால்வெளி மண்டலங்களின் கொத்து என்ற கேலக்ஸி கிளஸ்டர்ஸ் என்பது ஆயிரக்கணக்கான தனித்த பால்வெளி மண்டலங்கள், கருந்துகளைகள் (dark matter), கடும் உஷ்ணவாயு ஆகியவை அடங்கியதாகும், இவை புவியீர்ப்புவிசையினால் பிணைக்கப்பட்டுள்ளன.
நாஸாவின் சந்திரா எக்ஸ்-ரே கதிர்கள் மூலம் இந்த பெருவெடிப்பைக் கண்டுபிடித்துள்ளனர். ஓபியூகஸ் கேலக்ஸி தொகுப்பு ஆயிரம் கேலக்ஸிகள் அடங்கிய பிரபஞ்சத்தின் மிகப்பெரிய கேலக்ஸி கிளஸ்டர் ஆகும். இதன் நடுமையத்தில் மிகப்பெரிய கருந்துளை உள்ளது.
கருந்துளைகள் மற்றப் பருப்பொருளை உள்ளே இழுத்துக் கொள்வது மட்டுமல்ல, அது உள்ளிருந்து ஏகப்பட்ட ஆற்றல்களை வெளிப்படுத்துவதாகும்.
இப்போது இந்த பெருவெடிப்பு நிகழ்வு முடிந்திருக்கலாம் என்றும் கருந்துளையிலிருந்து பொருட்கள் பறந்து வெளியே தூக்கி எறியப்படவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது குறித்த ஆய்வுகள் மேலும் தொடர்ந்து நம் பிரபஞ்ச ரகசியங்கள் இன்னும் வெளியாகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.