Last Updated : 26 Feb, 2020 04:06 PM

 

Published : 26 Feb 2020 04:06 PM
Last Updated : 26 Feb 2020 04:06 PM

கரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை; அமெரிக்காவில் புது முயற்சி

ஏற்கெனவே எபோலாவுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருந்துகள் தயாரித்துக் கொடுத்ததாக உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனம், தற்போது கரோனான வைரஸ் நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அமெரிக்காவில் ஒமாஹாவில் அமைந்துள்ள நெப்ராஸ்கா ஆய்வக ஆய்வுகளின் பரிந்துரைகள் புதிய வைரஸ் நோய்த் தாக்கத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க விரைவான முயற்சிகளை இந்த மருத்துவ ஆய்வு மையம் தொடங்கியுள்ளது.

கரோனா வைரஸ் சிகிச்சை அளிக்க சாத்தியமான வழிகளில் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவில் முதல் மருத்துவ சோதனை முயற்சியில் இறங்கியுள்ள நெப்ராஸ்கா தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் முடிவில் நோயினால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள 50 இடங்களில் 400 நோயாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம், கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு வரைவு ஆராய்ச்சித் திட்டத்தில், ''நெப்ரோஸ்காவின் ரெம்ட்சிவிர் மருந்துகள் நம்பிக்கை தரக்கூடிய மருந்து ஆகும். காங்கோவில் உள்ள சில எபோலா நோயாளிகளுக்கு ரெம்ட்சிவிர் மருந்துகள் ஓரளவுக்குப் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த நெப்ராஸ்கா ஆய்வக ஆய்வுகளின் பரிந்துரைகள் புதிய வைரஸ் நோய்த் தாக்கத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படும்'' என்று என்று பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு முயற்சிகளை மேற்பார்வையிடும் டாக்டர் ஆண்ட்ரே கலில் இன்று கூறியதாவது:

''சீனாவில் தோன்றிய நோயின் கொடிய தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் விரைவாகத் தீர்வு காண்பதற்காக நெப்ராஸ்கா மருத்துவ மையத்தின் ஆய்வுப் பரிசோதனை முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு உதவுவதே எங்கள் குறிக்கோள். மிகவும் தேவைப்படும் மக்களுக்கு இது பயன்படும். ஜப்பானில் ஒரு கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட 14 பேர் நெப்ராஸ்கா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 12 பேருக்கு கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா நோய் தாக்குதல் உருவான சீன நகரமான வூஹானுக்கு ஒரு பயணத்திற்குப் பிறகு நோய்வாய்ப்பட்ட வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஒரு நபர் உட்பட, குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளுக்குப் பயன்படுத்த கிலியட் தயாரிப்பின் ரெம்ட்சிவிர் மருந்து வழங்கப்பட்டது. அவர் நீண்டகாலம் மருத்துவமனையில் இருக்கவில்லை. இச்சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டார்.

வைரஸால் ஏற்படும் நோயான கோவிட்-19 பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு குறைந்தபட்சம் மிதமான அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சோதனைக்கு அனுமதிக்கப்படுவர்.

உண்மையில், இந்த மர்மமான வைரஸுக்கு நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகள் அல்லது தடுப்பூசிகள் என்று எதுவும் இல்லை, இது உலகெங்கிலும் 80,000க்கும் அதிகமான மக்களைப் பாதித்து 2,700க்கும் அதிகமானவர்களைக் கொன்றது. சீனாவில் பெரும்பான்மையான பேருக்கு இந்த நோய் அறிகுறி உள்ளது.

காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை எளிதாக்க மருத்துவர்கள் நோயாளிகளுக்கு திரவங்களையும் வலி நிவாரணிகளையும் தருகிறார்கள். கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களின் விஷயத்தில், மருத்துவர்கள் வென்டிலேட்டர்களைப் பயன்படுத்துகிறார்கள் அல்லது சுவாசிக்க உதவுகிறார்கள்.

சீனாவில் ஏற்கெனவே குறைந்தது நோயாளிகளுக்கான இரண்டு ஆய்வுகள் நடந்து வருகின்றன, இதில் ஒன்று ரெம்ட்சிவிர் சம்பந்தப்பட்டது. அதாவது நியூக்ளியோடைடு அனலாக்ஸின் பிரிவில் வைரஸ் தடுப்பு மருந்தான ரெம்ட்சிவிர் . இது மருந்துகளை ஆராய்ச்சி செய்து உருவாக்கி வணிகப்படுத்தும் அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனமான கிலியட் சயின்ஸால் தயாரிக்கப்படுகிறது. மற்றொன்று லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர் கொண்ட எச்.ஐ.வி மருந்தை சோதிக்கிறது''.

இவ்வாறு டாக்டர் ஆண்ட்ரே கலில் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x