Published : 25 Feb 2020 04:09 PM
Last Updated : 25 Feb 2020 04:09 PM

அமெரிக்காவில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது: ட்ரம்ப்

கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் அமெரிக்காவில் கட்டுப்பாட்டில் உள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் கோவிட்-19 ( கரோனா வைரஸ்) காய்ச்சல் குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''கரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் பெருமளவு கட்டுப்பாட்டில் உள்ளது. நாங்கள் அனைத்து நாடுகளுடனும் தொடர்பில் இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பரவாமல் இருக்க அந்நாட்டு நோய் தடுப்பு மையம் சிறப்பாகச் செயல்படுவதாகவும் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்தார்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 2,500க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x