Published : 24 Feb 2020 04:50 PM
Last Updated : 24 Feb 2020 04:50 PM

கரோனா வைரஸ் பாதிப்பு; ஈரானிலிருந்து வருபவர்களுக்குத் தடை நீட்டிப்பு: இராக்

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரானிலிருந்து வரும் பயணிகளுக்கான தடையை இராக் அரசு நீட்டித்துள்ளது.

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு பாகிஸ்தான், இராக் நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இதுகுறித்து இராக் பிரதமர் அலுவலகம் தரப்பில், “ஈரானிலிருந்து வரும் இராக்கியர்களைத் தவிர மற்றவர்களுக்கான பயணத் தடை நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தடை எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற தகவலை இராக் அரசு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஈரானில் கரோனா வைரஸுக்கு 50 பேர் பலியானதாக வெளியான தகவலை, அந்நாட்டு அரசு அது வெறும் வதந்தி என்று மறுத்துள்ளது. தொடர்ந்து கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. சீனா மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட்-19 ( கரோனா வைரஸ்) பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 2,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x