

பெரு நாட்டில் புதிய குரங்கினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாட்களாக, இந்த குரங்கின் மாதிரி ஒன்று, தவறான பெயரிடப்பட்டு, நியூயார்க்கில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் இதே போன்றதொரு குரங்கை ஜான் வெர்மீர் எனும் விலங்கியல் ஆய்வாளர் தலைமை யிலான குழு, பெரு நாட்டுவனம் ஒன்றில் கண்டுபிடித்தது. தற்போது அதற்கு கேலிசிபஸ் உரும்பம் பென்சிஸ் எனும் லத்தீன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெரு நாட்டில் உரும்பம்பா நதியோரத்தில் இந்த குரங்குகள் காணப்பட்டன.