Published : 20 Feb 2020 07:24 PM
Last Updated : 20 Feb 2020 07:24 PM

சுலைமானி கொலைக்குப் பிறகு ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் அமெரிக்கப் படையினருக்கு ஏற்பட்ட மூளைக் காயங்கள்

பாக்தாத்தில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ மேஜர் காசிம் சுலைமானி விவகாரத்துக்குப் பிறகு பாக்தாத்தில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர், அதில் அமெரிக்கப் படையினர் சிலருக்கு மூளைக்காயம் ஏற்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கப் படையினர் சுமார் 2,000 பேர் அந்த சமயத்தில் இருந்துள்ளனர். இதில் இருந்த அமெரிக்க ராணுவ நிபுணர் கிமோ கெல்ட்ஸ் அன்றைய தினத்தை செய்தி ஏஜென்சி ஒன்றிற்காக நினைவு கூர்ந்தார்.

ஏவுகணை பாய்ந்த அந்தத் தருணத்தில் தன்னை இரண்டு அடி தூக்கிப் போட்டதாக அவர் தெரிவித்தார். அதாவது ஒரு பெரிய தலைவலி ஏற்பட்டது, இத்துடன் தப்பினோம் என்று தான் நினைத்ததாகவும் ஆனால் அடுத்த நாள், “என் தலை ஏதோ லாரி மோதது போல் வலித்தது. என் அடி வயிறு கலங்கியது. தலையில் மூளையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று பலரும் தெரிவித்தனர்” என்றார்.

அதாவது தனக்கு ‘கன்கஷன்’ ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். சுமார் 109 ராணுவத்தினர்களுக்கு மூளைக் காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் ராணுவ வீரர்கள் சிலருக்கு இது போன்று கன்கஷன் பிரச்சினை ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கை கூறுவதாக செய்தி ஏஜென்சி தெரிவிக்கிறது.

ஈரான் ஏவுகணைத் தாக்குதல் முடிந்து ஒருவாரம் சென்ற பிறகு ஜனவரி.16ம் தேதி அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் ராணுவ வீரர்களுக்கு மூளையில் காயம் ஏற்பட்ட தகவலை அறிந்தார். 11 பேருக்கு கன்கஷன் இருந்ததாகவும் சிலர் ஜெர்மனிக்கும் சிலர் குவைத்துக்கும் மேல் சிகிச்சைக்குச் சென்றதாக பெண்டகன் தெரிவித்தது.

அதிபர் ட்ரம்ப், ‘ஆல் இஸ் வெல்’ என்று கூறியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

2000 ஆண்டு முதல் சுமார் 414,000 அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு துயர் தரும் மூளைக்காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று பெண்டகன் தரவு தெரிவிக்கிறது. ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கு காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி 28ம் தேதி மூளைக்காயம் அடைந்த வீரர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது. பிப்ரவரி தொடக்கத்தில் மூளைக்காய வீரர்கள் எண்ணிக்கை 100ஐ கடந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முதன் முதலில் செய்தி வெளியிட்டது.

நன்கு பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களுக்கே கன்கஷன் என்ற மூளைக்காய சிக்கல்கள் ஏற்படுகிறது என்றால் போர்ச்சூழலில் தீவிரவாதத் தாக்குதல், தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகளில் மக்களில் எத்தனை பேருக்கு, குழந்தைகள், முதியோர், பெண்கள் ஆகியோரில் எத்தனை பேர்களுக்கு நிரந்தர மூளை, மனநோய் ஏற்பட்டிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x