Published : 20 Feb 2020 10:23 AM
Last Updated : 20 Feb 2020 10:23 AM

சீனாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்கள்: மீட்டுவர விமான செலவுக்கு தவிக்கும் இம்ரான் கான்; மக்கள் போராட்டம்

காரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சீனாவில் சிக்கியுள்ள பாகிஸ்தான் மாணவர்களை மீ்ட்க இம்ரான் கான் அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனக் கூறி அந்நாட்டில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் அந்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

சீனாவின் வூஹான் நகர்லிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 258 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 11,000 க்கும் அதிகமான நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக 1,347 பேர் இவ்வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு பகுதியில் வெளிநாட்டினர் பலரும் சிக்கித் தவிக்கின்றனர். ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் கல்வி மற்றும் தொழில் தேவைக்காக சீனா சென்று தங்கியுள்ளனர். அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு தங்கள் நாட்டினரை பத்திரமாக மீட்டு சொந்த நாட்டுக்கு அழைத்து வர அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஆனால் பாகிஸ்தானில் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. சீனாவின் வூஹான் நகரிலேயே பாகிஸ்தான் மாணவர்கள் பலர் சிக்கியுள்ளனர். அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப சீனாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை தொடர்பு கொண்டபோதும் உதவி கிடைக்கவில்லை.


வெளிநாட்டு விமானங்களில் அவர்களை அழைத்து வர யாரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதேசமயம் பாகிஸ்தானில் இருந்தும் விமான உதவி செய்ய அந்நாட்டு அரசு இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. தனி விமானங்களை இயக்க அதிகமான செலவு ஆகும் என்பதால் இம்ரான் கான் அரசு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இம்ரான் கானை கண்டித்து பாகி்ஸ்தானில் நேற்று பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சீனாவில் சிக்கியுள்ள மாணவர்களின் உறவினர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x