Published : 17 Feb 2020 10:30 AM
Last Updated : 17 Feb 2020 10:30 AM

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஈரான் அடிபணியாது: ஈரான்

பேச்சுவார்த்தைகளுக்கான அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஈரான் என்றும் அடி பணியாது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரஹ்ஹானி கூறும்போது, “பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கா
அளிக்கும் அழுத்தங்களுக்கு ஈரான் என்றும் அடிபணியாது . பலவீனமான நிலையில் நாங்கள் பேச்சுவார்த்தைகளை அணுகமாட்டோம். நம் மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் தோல்வியில் உள்ளது. இது நமது எதிரிக்கு நன்கு தெரியும். மத்தியக் கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்கு ஈரானின் உதவி அவசியம்” என்றார்.

இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.

அதற்குப் பதிலடியாக பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது.

மேலும் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி ஈரான் அணு ஆயுத சோதனைகளை நடத்துவதால் அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளையும் அந்நாட்டின் மீது விதித்து வருகிறது.

தவறவீடாதீர்!

சர்வதேச தாய்மொழி தினம்; பல்கலைக்கழகங்களில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்: யுஜிசி உத்தரவு

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வரைவு செயல்திட்டம் தரவுகள் இன்றி தயாரிக்கப்பட்டுள்ளது: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு; வரைவு திட்டத்தை தமிழில் அளிக்கவும் வேண்டுகோள்

எம்.பி.யாகிறார் பிரியங்கா காந்தி? மாநிலங்களவையில் காங்கிரஸின் பலம் குறைய வாய்ப்பு; பாஜக பலம் அதிகரிக்கும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x