மசூத் அசாரை காணவில்லை: பாகிஸ்தான் அறிவிப்பு

மசூத் அசாரை காணவில்லை: பாகிஸ்தான் அறிவிப்பு
Updated on
1 min read

பாகிஸ்தான் மசூத் அசாரையும் அவரது குடும்பத்தினரையும் காணவில்லை என்று சர்வதேச தீவிரவாத நிதி தடுப்பு கண்காணிப்பு அமைப்பிடம் தெரிவித்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில்ன் பாலகோட் பகுதியில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது முகாம்களை இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ம் தேதி குண்டுவீசி அழித்ததாகக் கூறப்பட்டது.

இந்த சூழலில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஆண்டு மே மாதம் 1-ந்தேதி அறிவித்தது.

இந்த நிலையில் சர்வதேச தீவிரவாத நிதி தடுப்பு அமைப்பின் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் மசூத் அசாரையும் அவரது குடும்பத்தினரையும் காணவில்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் அக்கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் கூறும்போது, தங்கள் நாட்டில் 16 சர்வதேச தீவிரவாதிகள் மட்டுமே இருந்ததாகவும், அவர்களில் 7 பேர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மற்ற 9 பேரில் லஷ்கர்- இ- தொய்பா தலைவர் ஹபீஸ் சயிது, அல்-கொய்தா அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய அப்துல் ரகுமான் உள்ளிட்ட 7 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட நிதி மற்றும் பயண கட்டுபாடுகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஐ.நா. அமைப்பிடம் விண்ணப்பிக்க இருந்தனர் என்று பாகிஸ்தான் கூறி உள்ளது.

தீவிரவாத தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத பாகிஸ்தானை சமீபத்தில் கருப்பு பட்டியலில் சேர்த்து சர்வதேச பயங்கர நிதி தடுப்பு அமைப்பு நடவடிக்கை எடுத்து இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in