Last Updated : 16 Feb, 2020 12:10 PM

 

Published : 16 Feb 2020 12:10 PM
Last Updated : 16 Feb 2020 12:10 PM

வான்வழித் தாக்குதலில் பொதுமக்களில் 30க்கும் மேற்பட்டோர் பேர் பலி: சவுதி கூட்டணிப் படையே காரணம்; ஏமன் கிளர்ச்சியாளர்கள் குற்றச்சாட்டு

ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டணிப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு வடக்கு மலை மாகாணத்தில் 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஐ.நா. இந்த தாக்குதலை அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளது.

ஹவுத்தி என்று அழைக்கப்படும் ஏமன் கிளர்ச்சியாளர்கள், சனிக்கிழமையன்று அவர்கள் சவுதி தலைமையிலான கூட்டணியின் ஜாவ்ஃப் மாகாணத்தின் மீது ஒரு போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்தது.

சவுதி அரேபியாவின் எல்லையில் நாட்டின் வடக்கின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹவுத்திகளால் 2014 ஆம் ஆண்டு தலைநகரை கையகப்படுத்தியதன் மூலம் ஏமன் மோதல் தொடங்கியது. பெரும்பாலும் அரபு நாடுகளின் சவுதி தலைமையிலான கூட்டணி தலையிட்டு 2015 மார்ச் மாதம் ஜனாதிபதி அபேத் ரபு மன்சூர் ஹாதியின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர முயற்சித்தது.

அமெரிக்க ஆதரவு கூட்டணியின் தூண்களான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மேற்கத்திய நாடுகளிடமிருந்து, குறிப்பாக அமெரிக்காவிலிருந்து பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வாங்கியுள்ளன.

மரிப், ஜாவ்ஃப் மற்றும் சனா மாகாணங்களில் அரசாங்கப் படைகளுக்கும் ஹவுத்திகளுக்கும் இடையே கடும் மோதல்களுக்கு இடையே போர் விமானம் விபத்து மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடந்தன. அண்மையில் ஏற்பட்ட மோதல்களில் நூற்றுக்கணக்கான மக்கள், பெரும்பாலும் போராளிகள் கொல்லப்பட்டனர், இது குறைந்தது 4,700 குடும்பங்கள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட காரணமானது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

சவுதி தலைமையிலான கூட்டணி படையே காரணம்: ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தகவல்

பொதுமக்கள் 30 பேர் பலியானதற்கு சவூதி தலைமையிலான கூட்டணிப் படையின் வான்வழித் தாக்குதல் தான் என்று குற்றஞ்சாட்டியுள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் இணைய தளங்களில் சில படங்களை வெளியிட்டுள்ளனர்.

அதில் அழிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் மற்றும் உடல்களைக் காட்டும் கிராஃபிக் படங்களை வெளியிட்டனர், அவை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி. சவுதி விமானம் கீழே விழுந்ததையும் அதன் சிதைவையும் காட்டும் காட்சிகளையும் அவர்கள் வெளியிட்டனர். இன்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டணி நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு வடக்கு மலை மாகாணத்தில் 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்'' என்று தெரிவித்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் அரசு நடத்தும் செய்தி நிறுவனம், கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மாலிகியை மேற்கோளிட்டு, டொர்னாடோ போர் விமானம் வீழ்ச்சியடைந்த பின்னர் அந்த பகுதியில் நடந்த மீட்பு நடவடிக்கையில் இருந்து ஏற்படக்கூடிய சேதங்கள் குறித்து விசாரித்து வருவதாகக் கூறினார்.

ஹவுத்திகளுடன் போராடும் ஏமன் அரசாங்கப் படைகளுக்கு விமான ஆதரவை அளிப்பதாக அல்-மாலிகி மேற்கோளிட்டுள்ளார். ''விமானக் குழுவில் உயிர்ப்பலிகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா அல்லது அவர்கள் என்ன ஆனார்கள்'' என்பது குறித்து மேலும் விவரங்களை அவர் வழங்கவில்லை.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்: ஐ.நா. குற்றச்சாட்டு

ஏமனுக்கான ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் லிஸ் கிரனேட் கூறுகையில், ''அல்-மஸ்லப் மாவட்டத்தில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 31 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். ஏமனில் பலர் கொல்லப்படுகிறார்கள் - இது ஒரு சோகம், அது நியாயமற்றது. இந்த மோதலுக்கு ஐந்து ஆண்டுகளாக இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்த பொறுப்பை ஏற்கத் தவறிவிட்டனர். இது அதிர்ச்சியளிக்கிறது. காயமடைந்த பலர் ஜவ்ஃப் மற்றும் ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்'' என்றார்.

சேவ் தி சில்ட்ரன் என்ற மனிதாபிமானக் குழு அறக்கட்டளையின் யேமன் நாட்டு இயக்குநர் சேவியர் ஜூபெர்ட் கூறுகையில்,

''பொதுமக்கள் உயிரிழக்கக் காரணமான இந்த வான்வழித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது, ஏமனில் இன்னும் மோதல் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது. இந்த சமீபத்திய தாக்குதல் அவசரமாகவும் சுயாதீனமாகவும் விசாரிக்கப்பட வேண்டும், மேலும் குற்றவாளிகள் பொறுப்பு ஏற்கவேண்டும். ஏமனின் மோதலில் போராடும் கட்சிகளுக்கு ஆயுத விற்பனை செய்பவர்கள் உடனடியாக அதை நிறுத்தவேண்டும். இந்த போருக்கான ஆயுதங்களை வழங்குவதன் மூலம், இன்றைய கொடுமைகளைச் செய்வதற்கு அவை பங்களிப்பு செய்கின்றன என்பதை போராடும் கட்சிகளுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விற்பவர்கள் உணர வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x