Published : 15 Feb 2020 05:37 PM
Last Updated : 15 Feb 2020 05:37 PM

பிரான்ஸில் கரோனா வைரஸ்ஸுக்கு முதல் பலி

பிரான்ஸில் கரோனா வைரஸ்ஸுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ மூத்த சீன சுற்றுலா பயணி ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் மரணடந்து உள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள முதல் கரோனா வைரஸ் பலி இதுவாகும். பிரான்ஸில் கரோனா வைரஸ்ஸால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சீனாவைத் தவிர 25 நாடுகளில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு உள்ளது. இதில் சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 1500க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். சுமார் 60,000க்கும் அதிகமானவர்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தவறவீடாதீர்

எகிப்தில் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

முன்கூட்டியே கப்பலிலிருந்து கீழிறக்க முயற்சி: கோவிட் 19 வைரஸினால் தனிமைப்படுத்தப்பட்ட இந்தியர்கள் குறித்து இந்திய தூதரகம் தகவல்

இடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x