Published : 15 Feb 2020 04:52 PM
Last Updated : 15 Feb 2020 04:52 PM

துருக்கியுடனான மோதல்களுக்கு இடையே சுட்டு வீழ்த்தப்பட்ட சிரிய விமானம்

துருக்கி - சிரியா இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரிய ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இவ்வாரத்தில் இம்மாதிரியான தாக்குதல் நடத்தப்படுவது இரண்டாவது முறையாகும்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “கடந்த டிசம்பர் மாதம் முதல் சிரியாவின் வடக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் உதவியுடன் சிரிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சில பகுதிகளை சிரிய படைகள் கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில் மேற்குப் பகுதியிலிருந்து எதிரிகள் தரப்பிலிருந்த வந்த ஏவுகணை ஒன்று நமது ராணுவ
விமானத்தைத் தாக்கியது. ஹெலிகாப்டரில் இருந்த இரு பைலட்களும் கொல்லப்பட்டனர்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிரியாவின் அரசுப் படைகள் ரஷ்யப் படை உதவியுடன் இட்லிப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றின. இதன் காரணமாக தற்போது சிரிய படைக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. ஆனால் அப்பகுதியில் தங்கள் கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ள துருக்கிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சிரியா - துருக்கி இடையே மோதல் வலுத்துள்ளது.

தவறவீடாதீர்!

ஈழத் தமிழர்களுக்குக் கொடுமை; இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழையத் தடை: இலங்கை அரசு கடும் கண்டனம்

ஆப்கனில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி

காஷ்மீர் குறித்த எர்டோகன் கருத்து: இந்தியா நிராகரிப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x