Published : 14 Feb 2020 09:56 AM
Last Updated : 14 Feb 2020 09:56 AM

பிக் பென் கடிகார பராமரிப்புக்கு ரூ.742 கோடி

பிரிட்டினின் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எலிசபெத் கோபுரத்தில் உலகின் புகழ்பெற்ற பிக் பென் கடிகாரம் உள்ளது. கடந்த 1856-ம் ஆண்டில் இந்த கடிகாரம் வடிவமைக்கப்பட்டது.

315 அடி உயர கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடிகாரத்தின் விட்டம் 23 அடியாகும். இதன் மணிகளின் எடை 13.7 டன்னாகும்.

இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் தாக்குதலால் பிக் பென் கடிகாரம் சேதமடைந்தது. அதன்பின் கடிகாரம் பழுது பார்க்கப்பட்டது. பின்னர் 1976, 1983, 1985, 2007-ம் ஆண்டுகளிலும் கடிகாரத்தில் பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் கடந்த 2017 ஆகஸ்டில் கடிகாரத்தை பழுது பார்க்கும் பணி மீண்டும் தொடங்கியது. இதற்காக 4 ஆண்டுகள், அதாவது வரும் 2021 வரை கடிகாரம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது கடிகார பழுது பணிக்காக ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டது. எனினும் செலவு அதிகரித்து வருகிறது. இதன்படி கடிகார பழுது பணிக்காக ரூ.742 கோடி செலவிடப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x