

தீவிரவாதிகள் தொடர்பான வழக்கு களை விரைந்து விசாரிப்பதற்காக, சிறப்பு ராணுவ நீதிமன்றங்களை அமைக்கும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் முடிவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் அரசியல மைப்பில் 21-வது சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் மேற் கொள்ளப்பட்டது. இதன்படி கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் ராணுவச் சட்டம் 1952-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பெஷாவர் பள்ளி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட தையடுத்து அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.
இதன் மூலம் சிறப்பு ராணுவ நீதிமன்றங்கள் அமைக்க வகை செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், 11 நீதிபதிகள் நாடாளுமன்றத்தின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பளித் தனர். 6 பேர் எதிராக தீர்ப்பளித் தனர்.
இதைத்தொடர்ந்து, சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்கும் நாடாளுமன்றத்தின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.