

இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் ஒபாமாவின் முடிவுக்கு அந்நாட்டு எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி களைச் சேர்ந்த 22 செனட் உறுப்பி னர்கள் இதுதொடர்பாக ஒபாமாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் இப்போது உள்ள இயற்கை எரிவாயுவின் விலையைவிட ஆசிய நாடுகளில் 3 முதல் 4 மடங்கு அதிகம். இயற்கை எரி வாயுவை ஏற்றுமதி செய்வதன் மூலம் அமெரிக்கா வில் நுகர்வோருக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் கிடைக்கும் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி தடைபடும்.
இயற்கை எரிவாயு விலை குறைவாக இருப்பதால்தான் அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களில் கடந்த 4 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. எனவே, ஏற்றுமதி செய்யும் முடிவை கைவிட வேண்டும்.