Published : 11 Feb 2020 01:09 PM
Last Updated : 11 Feb 2020 01:09 PM

கரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு உதவும் ரோபோ

நியூயார்க் சதுக்கத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் ரோபோ, கரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு விடையளிக்கிறது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சுமார் 25 நாடுகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் மனிதனைப் போன்ற உருவத்தையுடைய ஒரு ரோபோ, கரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களைக் கேட்கும் மக்களுக்கு எளிமையாகவும், புரியும் வகையிலும் பதிலளித்து வருகிறது.

ரோபோவின் கழுத்துப் பகுதியில் உள்ள டச் ஸ்கீரினில் கரோனா வைரஸ் தொடர்பான சந்தேகங்களை மக்கள் கேட்கலாம். இதனைத் தொடர்ந்து ரோபோ தனது கைகளை அசைத்துப் பதிலளிக்கிறது.

முன்னதாக, சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவில் 1,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

தவறவீடாதீர்!

கரோனா வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 1,011 ஆக அதிகரிப்பு

டெல்லி தேர்தல்; மீண்டும் வெற்றி வாகை சூடுகிறது ஆம் ஆத்மி: 3-ம் முறையாக முதல்வராகிறார் கேஜ்ரிவால்

18 நிமிடங்களில் 25 கி.மீ. தூரத்தைக் கடந்த ஆம்புலன்ஸ்: மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் சென்னை கொண்டு வரப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x