Last Updated : 09 Feb, 2020 12:31 PM

 

Published : 09 Feb 2020 12:31 PM
Last Updated : 09 Feb 2020 12:31 PM

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர் தனது மகளுக்கு பிரியாவிடை: காண்போரை உருகவைத்த வைரலான வீடியோ

சீனாவில் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு செவிலியர் தன் மகளிடம் தூரத்திலிருந்தே அணைத்துக்கொள்வது போல கைகளை விரித்து பிரியாவிடை அளித்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகியது. இதைக் கண்ட நெட்டிசன்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.

இந்த வீடியோவை சீன அரசு செய்தி ஊடகம் சினுவா ட்வீட் செய்துள்ளது. காண்போர் அனைவரையும் உருக வைத்து உலகம் முழுவதும் வைரலாகி வரும் வீடியோ குறித்த விவரம்:

வீடியோவில், மருத்துவமனைக்கு வெளியே செவிலியர் பாதுகாப்பு உடைகள், ஒரு முகமூடி அணிந்துகொண்டு தனது மகளிடருந்து பல மீட்டர் தொலைவில் தள்ளி நிற்கிறார். தூரத்திலிருக்கும் சிறுமி கூச்சலிட்டு, ''அம்மா, நான் உன்னை இழக்கிறேன்” என்று கதறுகிறார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, அம்மா, “அம்மா உங்களையும் இழக்கிறார், நான் உன்னை அணைத்துக்கொள்கிறேன்” என்று பதிலளித்தபடியே கைகளை விரிக்க அதற்கு மகளும் கதறியபடியே கைகளை விரித்து அணைத்துக்கொள்வதுபோல செய்கிறார்.

இதற்கிடையே மகள், '' அம்மா சீக்கிரம் வீட்டிற்கு வர முடியுமா'' என்று சிறுமி கேட்க, அதற்கு அந்த செவிலியர் தாய், ''உன் தாய் ஒரு அரக்கனை எதிர்த்துப் போராடுகிறாள்'' என்றும், ''வைரஸ் தோற்கடிக்கப்பட்டவுடன், அம்மா வீட்டில் இருப்பார்'' என்றும் சொல்கிறார்.

பின்னர் வீட்டிலிருந்து எடுத்துவந்த உணவுப் பாத்திரத்தை தூரத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டு மகள் செல்ல, அதனை எடுத்துக்கொண்ட செவிலியர் கையசைத்தபடியே செல்கிறார். தன் தாய் தூரத்திலிருந்து உணவை எடுத்துச் செல்வதை சிறுமி பார்த்தவாறு அழுதபடியே நிற்கிறார்.

சமூக ஊடகங்களின் வாசகர்களிடமிருந்து வரும் பதிவுகளால் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கின. உணர்ச்சிவசப்படுவது முதல் தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது வரை மக்கள் பல எதிர்வினைகளை வெளியிட்டனர்.

ஒரு பயனர் எழுதினார், ''இது மிகவும் வேதனையானது. இந்த அரக்கனை வெல்ல சீனர்களுக்கு கடவுள் உதவட்டும். செவிலியருக்கு பெருமையையும்''

இன்னொருவர் எழுதினார், “ஒழுங்காக குணப்படுத்தப்படாவிட்டால், அத்தகைய வைரஸால் மனித இனங்கள் அழிந்து விடுமோ என்று நான் பயப்படுகிறேன். நீங்கள் அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன். ”

ஒரு இடுகையில், “இந்த வீடியோவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே என் கண்களில் கண்ணீர். இந்த குடும்பங்களுக்கு இப்போது அனைத்துமே கடினமான நேரம். ஆனால் இது நிரந்தரமானது அல்ல. விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.'' என்று பதிவிட்டுள்ளதையும் காணமுடிகிறது.

மற்றொரு இடுகையில் "17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவராக என் அம்மா SARS உடன் போராடும் போது நான் அந்த சிறுமியைப்போலவே இருந்தேன்" என்று என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு பயனர் குறிப்பிட்டார், “எனக்கு உதவ முடியாது, ஆனால் இந்த காட்சியைக் காணும்போது அழுகையாக வருகிது. போர்முனையில் இருப்பது போன்ற அந்த மருத்துவ ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பது எளிதல்ல. ”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x