Published : 08 Feb 2020 03:21 PM
Last Updated : 08 Feb 2020 03:21 PM

குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்வோரை மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்: பாக். நாடாளுமன்றத்தில் தீர்மானம் 

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுப்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சட்டமாக மாறக்கூடியதாக அல்லாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெருகி வரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து இதுதொடர்பான தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இது பிணைப்பற்ற தீர்மானம் என்று பெயர், அதாவது சட்டமாக கட்டாயமாக மாற வேண்டிய அவசியமில்லாதது

இந்த நிலையில் பஅந்நாட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், அலி முகமது கான், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்பவர்களை பொதுவெளியில் தூக்கிலிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறினார்.

இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக பலரும் வாக்களித்தனர், ஆளும் பிடிஐ கட்சியும் இதனை ஆதரிக்கிறது.

ஆனால் மனித உரிமை ஆர்வலர்களும், எதிர்க்கட்சியினரும் இந்தத் தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, இதனையடுத்து அங்கு ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன. ஆனால் குற்றம்சாட்டப்படுவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்பது ஒரு வெகுஜன நம்பிக்கையே என்றும் இது பழிவாங்கும் செயல்தானே தவிர இதனால் குற்றங்கள் குறைந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் ஆம்னெஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு கிராமத்திலிருந்து குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபார வீடியோக்கள் கடுமையாக உருவாகி பரவியதையடுத்து 2016-ல் அங்கு கடுமையான சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x