நாளுக்கு நாள் எகிறும் கரோனா வைரஸ் மரணங்கள்: விழிபிதுங்கும் சீனா- பலியானோர் எண்ணிக்கை 722 ஆக அதிகரிப்பு

நாளுக்கு நாள் எகிறும் கரோனா வைரஸ் மரணங்கள்: விழிபிதுங்கும் சீனா- பலியானோர் எண்ணிக்கை 722 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

சனிக்கிழமையான இன்றைய நிலவரப்படி சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸுக்குப் பலியானோர் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது, இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,500 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் அறிவிப்பின்படி மேலும் 86 பேர் மரணமடைந்ததையடுத்து சாவு எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சார்ஸ் வைரச் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கையை விட கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் 3,499 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கரோனா பாதிப்பு உறுதியான எண்ணிக்கை 34,500 ஆக உள்ளது.

சுமார் 56 மில்லியம் மக்கள் தொகையை வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சீனா லாக் செய்திருந்தாலும் கரோனா பலிகளைத் தடுக்க முடியாமல் விழி பிதுங்கி வருகிறது.

இந்த வைரஸ் குறித்து டிசம்பரிலேயே எச்சரிக்கை விடுத்த மருத்துவரை சீனா எச்சரித்தது, ஆனால் அந்த மருத்துவரே கரோனாவுக்கு பலியானது அங்கு மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கரோனா 24 நாடுகளுக்குப் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in