மலாலாவைச் சுட்ட நபர் பாக். ராணுவச் சிறையிலிருந்து தப்பிப்பு

மலாலாவைச் சுட்ட நபர் பாக். ராணுவச் சிறையிலிருந்து தப்பிப்பு
Updated on
1 min read

பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பிச் சென்ற தலிபான்களின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இஹ்சனுல்லா இஹ்சன் தற்போது துருக்கியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான ஆடியோவையும் வியாழக்கிழமையன்று இஹ்சனுல்லா இஹ்சன் வெளியிட்டுள்ளார்.

அதில் இஹ்சன் கூறுகையில், “நான் இஹ்சனுல்லா இஹ்சன். நான் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பின் முன்னாள் செய்தித் தொடர்பாளர். நான் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி பாகிஸ்தான் அதிகாரிகளிடம் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சரணடைந்தேன். ஆனால், சிறையில் பாகிஸ்தான் அதிகாரிகள் என் மீது அத்துமீறி நடந்து கொண்டார்கள். நான் தற்போது என் குடும்பத்தினருடன் துருக்கியில் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் அவர் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கூடுதல் விவரம் குறித்துப் பின்னர் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் இம்ரான் கான் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளன.

இதுகுறித்த பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

தப்பிச் சென்ற இஹ்சனுல்லா இஹ்சன், மலாலா மீதான துப்பாக்கிச் சூடு, பெஷவர் ராணுவப் பள்ளி மீதான தாக்குதல் உள்ளிட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in