

இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பில் (OIC) காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை சவுதி அரேபியா கிடப்பில் போட்டது.
காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறு சவூதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.
இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி காஷ்மீர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்ற இம்ரான் கானின் கோரிக்கைக்கு 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புகள் செவிசாய்க்கவில்லை.
இதனால் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் ஆதரவு கிடைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அண்மையில் மலேசியாவிலும் அவருக்கு போதிய அளவுக்கு ஆதரவு கிடைக்காததால் ஏமாற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பரில் இதற்கு சவுதி அரேபியாவை சம்மதிக்க வைத்து விட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தம்பட்டம் அடித்தார், ஆனால் அந்தச் செய்தி நிரூபணமாகவில்லை என்று இந்திய தரப்பில் கூறப்பட்டது.
சமீபத்தில் மலேசியா நடத்திய இஸ்லாமிய உச்சிமாநாட்டிற்கு சவுதி அரேபியா அழைக்கப்படாததால் அந்த நாடு பாகிஸ்தான், மலேசியா, துருக்கி மீது கடும் அதிருப்தி கொண்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு தன் உதவியையும் நிறுத்திவிடுவதாக சவுதி எச்சரிக்கையும் விடுத்தது.
சவுதி அரேபியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமான நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
தவறவிடாதீர்: