

துருக்கியில் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையிலிருந்து தவறிச் சென்று விபத்துக்குள்ளானதில் விமானம் மூன்று துண்டுகளாயின. இந்த விபத்தில் 3 பேர் பலியாயினர்.
இதுகுறித்து துருக்கி அதிகாரிகள் தரப்பில், “ துருக்கியின் கிழக்குப் பகுதியிலிருந்து 177 பயணிகளுடன் வந்த விமானம் இஸ்தான்புல்லில் உள்ள சபிஹா கோக்சென் சர்வதேச விமான தளத்தில் மோசமான வானிலை காரணமாக தரையிறங்கியது. அப்போது விமான ஓடுதளத்திலிருந்து தவறிச் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் மூன்று துண்டுகளாயின. இந்த விபத்தில் 3 பேர் பலியாயினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்தில் தப்பித்த பயணிகளிலிருந்து ஒருவர் கூறும்போது, ''திடீரென விமான ஓடுபாதையிலிருந்து நகர்ந்ததில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானப் பகுதிகள் உடைந்தன. இது மோசமான விபத்து” என்றார்.
விமான விபத்து குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக துருக்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறவீடாதீர்!