Published : 31 Jan 2020 04:02 PM
Last Updated : 31 Jan 2020 04:02 PM

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சகல வசதிகளுடன் மிக நீளமான சுரங்கம் தோண்டிய போதை மருந்து கடத்தல் கும்பல்

அமெரிக்கா - மெக்சிகோ எல்லையருகே இதுவரை இல்லாத அளவு மிக நீளமான போதைப் பொருள் கடத்தல் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 2014ல் 2,966 அடி நீள சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது 70 அடி ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ள சுரங்கத்தின் நீளம் 4,309 அடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் 5.5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டுள்ளது. மெக்சிகோவின் திஜுவானா பகுதியிலிருந்து, சாண்டியாகோவின் தென்மேற்கு எல்லை வரை நீளும் இச்சுரங்கத்திற்கு அமெரிக்காவுக்குள் வெளியேறும் பகுதி இல்லை.

மேலும் இழுவை வண்டி, உயர் மின்னழுத்தம் கொண்ட மின்சார ஒயர்கள், கழிவுநீர்அமைப்பு, காற்றோட்ட வசதி, நுழைவாயிலில் மின்தூக்கி உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இப்பகுதியில் எவ்வித போதை பொருள்களும் கண்டறியப்படாததோடு, யாரும் கைது செய்யப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலிருந்து சட்ட விரோதக் குடியேறிகளைத் தடுக்கவும் போதை மருந்து கடத்தலை ஒழிக்கவும் மிகப்பெரிய சுவர் எழுப்பப்படும் என்று அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்த நிலையில் சுரங்கப்பாதைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பாதுகாப்புப் பிரச்சினை தரைக்கு மேல் இல்லை தரைக்குக் கீழே என்று தெரிகிறது.

இந்தச் சுரங்கத்திலிருந்து அமெரிக்கப் பக்கம் வழியாக வெளியேறும் வழி ஏகப்பட்ட மணல் மூட்டைகளால் மறைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுரங்க நடவடிக்கை தொடர்பாக இன்னும் கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த எல்லைப் பகுதி போதை மருந்துக் கடத்தல் மெக்சிகோவின் சினலோவா கார்ட்டெலைச் சேர்ந்தது, இந்தக் கார்ட்டெலின் தலைவன் எல் சாப்போ கடந்த ஜூலையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டான்.

2015-ல் இந்த எல் சாப்போ மெக்சிகோ சிறையிலிருந்து ஹாலிவுட் படம் தோற்கும் வகையில் தப்பினான், வீடியோ கேமரா இருந்தும் 600 அடி சுரங்கப்பாதை வழியாக ஒருநாள் தன் செல்லிலிருந்து காணாமல் போனான். இந்தச் சுரங்கத்தை அமைக்க சுமார் 1 மில்லியன் டாலர்கள் செலவாகியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் ஓராண்டு இதற்காக ஆகியிருக்கும் என்று கூறப்பட்டது.

போதை மருந்து மாஃபியாக்கள் இது போன்று அமெரிக்காவுக்கும் மெக்சிகோ அதிகாரிகளுக்கும் தொடர்ந்து அதிர்ச்சியளித்து வருகின்றனர்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x