

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக சீனா செல்லும் பயணிகளுக்கு சூடான உணவு, போர்வை, புத்தகங்கள் போன்றவை வழங்கப்பட மாட்டாது என, தைவானின் சீன ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
தனிமனித தொடர்புகளை தடுப்பதன் மூலம் வைரஸ் பரவுதலை தடுக்கலாம் என்ற முயற்சியில் அந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
அதற்காக இனி தங்களுக்கான குடிநீர் பாட்டில்களை பயணிகளே கொண்டு வரவேண்டும் என அறிவித்துள்ளது. இதன் வாயிலாக வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தியவர்கள் பொருளை மற்றவர் பயன்படுத்துவது தடுக்கப்படும்.
மேலும், இருக்கையின் பின்புறத்தில் முதலுதவி பையும், பாதுகாப்பு வழிமுறைகளை வலியுறுத்தும் அட்டை மட்டுமே இருக்கும் எனவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு தாய்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை 11 லட்சமாகும். ஆனால் தற்போது கரோனா வைரஸ் தாய்லாந்திலும் 14 பேருக்குப் பரவியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஹாங்காங்கின் கேத்தே பசிபிக் ஆகியவையும் சீனா செல்லும் பயணிகளுக்கு ஏகப்பட்ட சுகாதாரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.