

பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் கடை ஒன்றில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள், “பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் உள்ளது ஷாதரா பகுதி. இப்பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 12 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். 2 பேர் காயமடைந்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இடிபாடுகளில் உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகவும் டான் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து ஷாதரா நகர பகுதிவாசி ஒருவர் கூறும்போது, “நாங்கள் இங்கு முதலில் துணிக்கடை இருந்ததாகவே நினைத்தோம். தீ விபத்துக்குப் பின்புதான் தெரிந்தது இங்கு வாசனைத் திரவியங்களும் கொட்டிக் கிடந்தன” என்றார்.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.