ரஷ்யா, ஜப்பானில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம்

ரஷ்யா, ஜப்பானில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம்
Updated on
1 min read

ரஷ்யாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5. 2 ஆகப் பதிவாகியது.

இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள், “ரஷ்யாவில் உள்ள கூரில் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் யுஸ்னோ குரிலிஸ் மாவட்டத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இதே நேரத்தில் ஜப்பானின் கடற்கரைப் பகுதியான நிமோராவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகியதாகவும் இதன் ஆழம் 100 கிலோ மீட்டர் என்றும் ஜப்பான் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவர இல்லை. சுனாமி எச்சரிக்கைகள் ஏதும் விடுக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in